வியாழன், 1 டிசம்பர், 2011

குருதி கொடுப்போம் !

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, "எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்' என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், "உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?' என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, "எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது' என்று மகன் கூறுகின்றார். 

இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அம்முகத்தில் பேயறைந்தாற் போல் ஒரு தோற்றம்! 
தாயைக் காக்க தனயன் எப்படி முனைகின்றார்? மனைவியைக் காக்க கணவன் எப்படி முன் வருகின்றார்? என்று பாருங்கள். உதாரணத்துக்கு இந்த உறவுகள் சொல்லப்பட்டுள்ளன. இது போலவே தந்தைக்கு மகனும், தந்தை தன் பிள்ளைகளுக்கும் இரத்தம் கொடுக்க முன்வருவதில்லை. அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் கொடுக்க முன்வருவதில்லை. 

தன் இரத்த பந்தத்தை அதிலும் குறிப்பாக குர்ஆனும் ஹதீசும் முன்னுரிமை கொடுத்து பேணச் சொல்கின்ற தாயை ஒரு மகன் பேணுவதில்லை. மிகப் பெரும் தியாகத்தை இந்த மகனுக்காக தாய் செய்கின்றாள். அந்தத் தாயின் உயிரைக் காக்க மகன் இரத்தம் கொடுக்க மறுக்கின்றான். 
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. 
(அல்குர்ஆன் 31:14)

இந்த வசனத்தில் தாய் மகனுக்குச் செய்யும் தியாகத்தை உணர்த்தி, நன்றி செய்யச் சொல்கின்றான். ஒரு தாய்க்கு மகன் இரத்தம் கொடுக்கும் சந்தர்ப்பம் அளப்பரிய சந்தர்ப்பம் அல்லவா? அல்லாஹ்வுக்கும், தாய்க்கும் நன்றி செலுத்துவதற்கு இதைவிட இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமா? என்று சிந்தித்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?'' என்று கேட்டார்கள். அவர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், "(அப்படியானால் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் உன்னை அர்ப்பணித்துக் கொள்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), 
நூல் : புகாரி 5972

இதன் படி ஒரு தாய்க்காக மகன் தன்னை அர்ப்பணிப்பதற்கு தனக்கு வாய்த்த ஒரு பொன்னான தருணம் என்றெண்ணி தன் கடமையைச் செய்யாமல் இந்த மகன் தப்பி ஓடுகின்றார். உண்மையில் இவர் தன் தாய்க்கு அல்லது இரத்த பந்தங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரும் துரோகமாகும். 

தன் உறவினரை, இரத்த பந்தங்களை ஆதரிப்பதற்கு, தான் முதன் முத-ல் முன் வருவதை விட்டு விட்டு, தனது இரத்தத்தை ஒரு சொட்டு கூட இழக்கத் தயாராகாமல் அடுத்தவர் இரத்தத்தைத் தாரை வார்ப்பதற்காக வந்து நிற்பது முதல் தர சுயநலமும் வடிகட்டிய துரோகத் தனமும் ஆகும். 

தன்னிடத்தில் ஓடுவது மட்டும் தான் இரத்தம்! அடுத்தவரிடத்தில் ஓடுவது ஆற்று நீர் என்பது போல் அடுத்தவரின் இரத்தத்தைப் பெறுவதில் இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ளவர்கள் நடந்து கொள்கின்றார்கள். தனக்கு எப்படி இரத்தம் பெரிதாகத் தெரிகின்றதோ அதுபோல் தான் மற்றவர்களுக்கும் பெரிதாகத் தெரியும் என்று எண்ணுவது கிடையாது. 

இரத்த பந்தத்தை ஆதரிக்கும் நன்மையைப் பற்றித் தெரிந்திருந்தால் 
முஸ்-ம்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். மேலும் உறவினர்களை ஆதரிப்பது என்றால் பொருளாதார அடிப்படையில் ஆதரிப்பது மட்டும் தான் என்று விளங்கிக் கொண்டதும் இன்னொரு காரணமாகும். 

நோயாளியாகக் கிடக்கும் உறவினருக்கு தன் உடலால் பணிவிடை செய்வதும் உறவினரை ஆதரிப்பது தான் என்று விளங்கிக் கொண்டால் இதை விட உயர்ந்த சேவையான இரத்த தானத்திற்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் நிச்சயமாக முன் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். 

உறவினர்களுக்கு இரத்தம் வழங்குதல் என்பது நாம் ஒருவரை சாவி-ருந்து காத்து வாழ்வளித்தோம் என்ற நன்மையைப் பெறுவதுடன் உறவினரை ஆதரித்தோம் என்ற அடிப்படையில் இரண்டு மடங்கு நன்மைகளைப் பெற்றவர்களாகின்றோம். 

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களி-ருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் (ர-) க்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், "நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் என்று கூறி விட்டார். 

எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயி-ல் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜைனப் (ரலி), நூல் : புகாரி 1466

இங்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவிக்கு உறவினர்களை ஆதரித்ததற்காகவும், தர்மம் வழங்கியதற்காகவும் இரண்டு வித கூ-கள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண்கின்றோம். அஹ்மதில் வரும் அறிவிப்பின் படி, இந்த தர்மத்தின் மூலம் நரகத்திலிருந்து தான் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி கோரிக்கை வைத்ததாகவும் அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் உறவினர்களை ஆதரிப்பதன் மூலம் நரகத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது. 

இதுபோல் உறவினர்கள் அல்லாத இஸ்லாமிய சகோதரர்களுக்கு நாம் இரத்தம் வழங்குகையில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் நமக்குக் கூலி கிடைக்கின்றது. 
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் 
(அல்குர்ஆன் 5:32)

முஸ்லிம் அல்லாத மக்களுக்கு நாம் இரத்த தானம் செய்யும் போது, இஸ்லாம் இது போன்று ஈந்து இணக்கமாக நடக்கச் சொல்கின்றது என்று அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, இஸ்லாம் கூறும் மனித நேயத்தை எடுத்துக் காட்டும் விதமாக அமைகின்றது. இஸ்லாத்தை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம் என்ற கண்ணோட்டத்தில் இந்த இரத்த தானம் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. 

எனவே இரத்த தானம் செய்வோம். இரத்த பந்தத்தைப் பேணுவோம். இனிய சகோதரத்துவத்தைப் பறை சாற்றுவோம். இஸ்லாத்தின் மனித நேயத்தை இதர மக்களிடம் எடுத்துக் காட்டி இறை திருப்தியைப் பெறுவோம்.


Sharing from Facebook Friends 

செவ்வாய், 31 மே, 2011

பெண்கள் பேண வேண்டிய நாணம்!


மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.

இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.
மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.

வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?

கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதிஎன்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136

அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?

நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானேவெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?




நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு. அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?

எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!

எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அஹ்மத் 109)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:32-35)

தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)




நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.  “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமேஎன பதிலளித்தார்கள். நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)


நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்
நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!

ஃபைரோஸ் பானு

வியாழன், 19 மே, 2011

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு

இஸ்லாமிய மார்க்கம் பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் கருதுவது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். இப்பாவம் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடியதாகும். ஒருவர் ஒரு மனிதனை வணங்குவதோ அல்லது அந்த மனிதனிடம் கடவுள் தன்மை உள்ளது என்று நம்புவதோ, அவர் மரணித்த பின் அவரது மண்ணறையை புனிதமாகக் கருதுவதோ, அதை கட்டி வைத்துக் கொண்டு சுற்றி வருவதோ, அக்கல்லறையை தொட்டு முகர்வதோ, எண்ணெய் தடவுவதோ, அவரிடத்தில் தமது தேவையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திப்பதோ, அவருக்காக அறுத்துப் பலியிடுவதோ, அவருக்காக நேர்ச்சை வைப்பதோ, அவரின் பேரில் சத்தியம் செய்வதோ அக்கல்லறையை நோக்கி நேர்சை செய்து பிரயானம் செய்வதோ இணை வைத்தல் எனும் கொடிய பாவத்தைச் சேர்ந்தவைகளாகும் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

இணை வைத்தல் பற்றி அல்குர்ஆன்
மன்னிக்கப்படாத குற்றம்
இறைவன் அல்குர்ஆனில் இணை வைத்தல் எனும் பாவத்தைத் தவிர உள்ள பாவங்களை தாம் நாடியவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பபதாகக் குறிப்பிடுகின்றான்.‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்துவிட்டார்.’(அல்குர்ஆன் 4:48)
‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக வெகு தூரமான வழி கேடாக வழிகெட்டுவிட்டார்.’ (அல்குர்ஆன் 4:116)
ஏற்கனவே செய்த நன்மைகளை அழித்துவிடக் கூடிய கொடிய பாவம்
‘இன்னும் அவர்கள் (அழ்ழாஹ்வுக்கு இணை வைத்திருந்தால்) அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 6:88) மற்றுமோர் இடத்தில் ‘(நபியே)நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 39:65)

சுவர்க்கம் செல்வதை ஹராமாக்கும் பாவம்

‘நிச்சயமாக எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அழ்ழாஹ் சுவனபதியை தடுத்து விடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான்.’ (அல்குர்ஆன் 5:72)

வானத்திலிந்து விழுந்தவனைப் போன்றவன்
‘அழ்ழாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.’ (அல்குர்ஆன் 22:31)

மேற்கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் ஒரு இறை விசுவாசி இப்பாவத்தின் சாயல் படுவதையே விரும்ப மாட்டான் விரும்பவும் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு இறை விசுவாசியைப் பொறுத்தவரை இவ்வாறான அம்சங்களைச் செய்வதோ அல்லது இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதோ அவனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாயலைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாயல் என்ற தகுதியை இழந்த ஓர் இடமாகவே கணிக்கப்படும். காரணம் பள்ளிவாயல்களில் இறைவன் மாத்திரம்;தான் வணங்கப்பட வேண்டும், அழைக்கப்பட வேண்டும், பள்ளிவாயலினுள் சாமாதிகள் இருக்கக் கூடாது. கல்முனைக்குடி கடற்கரை மசூதியில் சமாதி வழிபாடு நடைபெறுகிறது, அழ்ழாஹ் அல்லாதவர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் தமது தேவையை மக்கள் கேட்கின்றனர் ஷிர்குகள் நிறைந்த பாடல்கள் பாடப்படுகின்றன, ராதிபுக்கள் நடைபெறுகின்றன, இசை கலந்த பாடல்கள் ஒலிக்கப்படுகின்றது, ஆண் பெண் கலப்புக்கள், அநாச்சாரங்கள், கலாசார சீர்கேடுகள் ஆகியன இடம்பெறுகிறன. மொத்தத்தில் அநாச்சாரங்களின் முழு வடிவமாக இவ்விடம் இருப்பதைக் காணலாம். அழ்ழாஹ்வின் மார்க்கம் பரிகசிக்கப்படுகின்ற, கேவலப்படுத்தப்படுகின்ற, குழிதோண்டிப் புதைக்கப்படகின்ற இவ்வாறான இடங்களுக்கு முஸ்லிம்கள் செல்வது மாற்று மதத்தவர்கள் தமது வணக்கஸ்தலங்களில் நடாத்தும் ஆராதனைகளை ஆதரித்து கோவில் விழாக்களுக்கு செல்வதற்கு சமமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறான இடங்களுக்கு செல்வது, மார்க்க ரீதியில் குற்றமாகும். இவ்வாறான இடங்களை நோக்கி பிரயாணம் செய்யும் வேளையில் மரணம் வந்துவிட்டால் அது கெட்ட முடிவுக்குரிய அடையாளமாகும்.

இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘அழ்ழாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான. நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அழ்ழாஹ் ஒன்று சேர்ப்பான்.’ (அல்குர்ஆன் 4:140) இவ்வசனத்தில் அழ்ழாஹ்வினுடைய மார்க்கம் நிராகரிக்கப்பட்டு பரிகாசிக்கப்படுவதை ஒரு சபையில் இருந்து மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பதையே அழ்ழாஹ் எச்சரிக்கையாக குறிப்பிடுவதைக் காணலாம்.

ஆனால், இன்று இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இதனுடைய விபரீதம் புரியாமல் இவ்வாறான இடங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அழ்ழாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இந்நிகழ்வுகளில் ஓர் உண்மை விசுவாசி கலந்துகொள்ளக் கூடாது. ஷைத்தானுக்கு வழிப்பட்டவர்கள் இவ்வாறான போதனைகளை புறக்கணித்து விட்டு கலந்து கொள்ளச் சென்றால் இவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருந்து விடவும் கூடாது. மாற்று மதத்தவர்கள் தமது ஆராதனைகளின் வடிவங்களாக தேர்த் திருவிழா என்றும், சந்தனக் கூடு என்றும், கொடி மரம் கொடியேற்றம் என்றும், அன்னதானம் என்றும் தமது தெய்வங்களை ஆராதனை செய்வதற்கு நிகராக நாமும் சளைத்தவர்கள் அல்லர் என்ற அமைப்பில் சமாதி வழிபாட்டில் இன்றய முஸ்லிம்களில் ஒரு சாரார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பதை மார்க்கத்தின் பெயரால் கூறிக் கொள்கின்றோம்.

பொழுது போக்கிற்காக சென்று வரலாமா?
மார்க்க விரோத செயற்பாடுகள் நடைபெறாத பள்ளிவாயல்களுக்கே விஷேடமாக பயணம் செய்து தரிசிப்பதை இஸ்லாம் விலக்கியிருக்கின்றது. ஆனால் பல பாவங்களின் மையமாகவுள்ள மேற்படி இடத்திற்கு தின்பண்டங்கள், பொருட்கள் வாங்கச் சென்றாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அதற்கு வழங்கும் மௌன அங்கீகாரமாகவே அது அமையும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மஸ்ஜிதுல், மஸ்ஜதுந் நபவ், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாயல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி-1189)
இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு என (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 109:1-6)

இவ்வசனத்தில் மிகத் தெளிவாக இறைவன் இறை மறுப்பாளர்கள் வணங்குவதை முஸ்லிம்களாகிய நாம் வணங்கக் கூடாது எனக் கூறியிருப்பதைக் காணலாம். மேலும் அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். ‘யார் எந்தச் சமுதாயத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே.’ (அறிவிப்பவர்: இப்னு உமர், நூல்: அபூதாவூத்). இந்த செய்தியில் பிற மதத்தவருடைய கலாசாரத்திற்கு ஒப்பாகுவதை நபியவர்கள் தெளிவாக தடுத்திருப்பதைக் காணலாம்.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அநாச்சாரத்தின் முழு வடிவமாகத் திகழும் கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றமும் அதையொட்டிய இன்னும் பல நிகழ்வுகளும் இஸ்லாத்தின் பார்வையில் கொடிய பாவச் செயல்கள் என தெரிந்ததன் பிறகும் இதில் கலந்த கொள்ள முயற்சிப்பது ஒரு உண்மை விசுவாசிக்கு உகந்ததல்ல. ஒரு கணவன் தனது அன்பு மனைவி விரும்புகிறாளே என்பதற்காக அவளது குறித்த இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ ஒரு மனைவி தனது அன்புக் கணவன் விரும்புகிறாரே என்பதற்காக இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ அல்லது தனது அன்புக் குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது பாசத்துக்குறிய தாய் தந்தையர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது உறவினர்கள், அயல் வீட்டுக்காரர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அழ்ழாஹ் கடுமையாக வெறுக்கின்ற கோபிக்கின்ற இவ்வாறான நிகழ்வுகளுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கக் கூடாது.

அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். ‘மற்றவர்களிடம் அழ்ழாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அலி (ரழி), நூல்: புஹாரி-7257). மற்றவர்கள தன்னை தவறாக நினைத்துவிடுவார்கள் என்றோ அல்லது அவர்களது அன்பு தனக்கு இல்லாமல் போய் விடுமென்றோ அற்ப சொற்ப உலக ஆதாயத்திற்காக அழ்ழாஹ்வின் மார்க்கத்தில் கைவைக்கக் கூடாது. ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருளான இரவின் துண்டுகளைப் போன்று அடுக்கடுக்கான குழப்பங்கள் வருவதற்கு முன் நன்மைகளை அவசரப் படுத்துங்கள். (அந்நேரத்தில்) காலையில் முஃமினாக இருந்தவன் மாலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். மாலை நேரத்தில் முஃமினாக இருந்தவன் காலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். தனது மார்க்கத்தை அற்ப உலக நோக்கத்திற்காக விற்றுவிடுவான்.’ (நூல்: முஸ்லிம்)

‘நீங்கள் நலவுக்கும், இறையச்சத்திற்கும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் எல்லை கடந்து செல்வதற்கும் துணையாக இருக்காதீர்கள்.’(அல்குர்ஆன் 5:2)

by darulathar

செவ்வாய், 17 மே, 2011

என்ன‌தான் செய்கிர‌து எம‌து நிந்த‌வூர் உலமா ச‌பை?



அல்லாஹுவின் ட்டலய்கயும் ற்றும் நபி [ஸல்] அவர்களின் ழிகாட்டுதல்கலயும் அப்பட்டமாகஒரு ஊரே மீறுகிரது ஆனால் லமைபோள் எமது உலமா யும் உலமாக்களும் தூங்கி கொண்டுதான் உல்லது.

ல்முனை க்கரை ள்ளி கொடியேற்றம் என்னும் பெயரில் ஒரு பெரும் க்கள் கூட்டமே நரகிற்கான இலவநுழய்வு சீட்டுகலை வாங்கிக்கொண்டு இறிக்கிம் போது அதை டுக்கவேண்டிய உலமாக்களோ இன்னும் வுனம் காப்பது எதற்காக? எந்த க்திக்காகஅஞ்சுகிரார்கள்? இவர்களுக்கு அல்லாஹ் இட்டிரிக்கும் ட்டலயை றுக்கிரார்களா? 

உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சன்யமின்றி எடுத்துரைப்பீராக. [அல்குர்ஆன் 15:94]

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104 

நபி [ஸல்] அவர்கள் வழி காட்டுதள்!

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 70

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு , அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு , அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம் 4194

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)  நூல்: புகாரி 2942

இவ்வாறு ம‌க்க‌லைய் வ‌ழிநடாத்த‌ வேண்டிய‌ உலமாக்க‌ளும் க‌ல்விமான்க‌ளும் இன்னும் மௌன‌ம் காக்கிரார்க‌ள், அல்லாஹூவுக்கும் அவ‌னுட‌ய‌ ர‌ஸூலுக்கும் க‌ட்டுப்ப‌ட‌வேண்டிய‌ இவ‌ர்க‌ள், அல்லாஹுவுக்கு மாத்திர‌ம் அஞ்ச‌வேண்டிய‌ இவ‌ர்க‌ள் அல்லாஹுவை த‌விர‌ ம‌ற்ற எல்லாவ‌ற்றுக்கும் அஞ்சுகிரார்க‌ள், அடிபணிகிரார்க‌ள்.
குர் ஆன் வ‌ச‌னம்க‌லயும் நபி [ஸல்] அவ‌ர்க‌ளின் பொன் மொழிக‌லயும் ம‌க்க‌ளுக்கு எடுத்து சொல்லி தீமையை த‌டுக்க‌ வேண்டியவ‌ர்க‌ள் இன்னும் விழித்துக்கொள்ள வில்லை!

எந்த‌ அடக்கத்தலங்களையும் (கப்று) வ‌ணக்க‌த்த‌லம் ஆக்காதீர்க‌ள் அதில் விழா எடுக்காதீர்க‌ள் என்னும் க‌டும‌யான எச்ச‌ரிக்கைக‌லை அல்லாஹுவும் அவ‌னுட‌ய‌ தூத‌ர் நபி [ஸல்] அவ‌ர்க‌ளும் விடுத்திரிக்கும்போது எம‌து மார்க்க‌ அறிஞ்ச‌ர்க‌ளுக்கோ அது எவ்வ‌க‌யிலும் ப‌ய‌ன் த‌ர‌வில்லை.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள் ; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
 இதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல் : முஸ்லிம்  1768,1769

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 1746,

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427, 434, 1341, 3873

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: புகாரி 3456

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.  
(அல்குர்ஆன் 16:20, 21)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது.
(அல்குர்ஆன் 34:23)

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:22)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
(அல்குர்ஆன் 7:194)

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்முஸ்லிம் 3084

நம்பிக்கை கொண்டோம் என்ப‌த‌ற்காக‌ மாத்திர‌ம் சோத‌னய்க‌லில் இருந்து த‌ப்பித்துவிட‌லாம் என்று எம‌து உலமாக்க‌ளும் க‌ல்விமான்க‌ளும் நினைத்துக்கொண்டார்க‌ள் போலும்!

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.
திருக்குர்ஆன் 29:2,3 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: திர்மிதீ 2323 

யாஅல்லாஹ் எம‌து உலமாக்கலயும் க‌ல்விமான்க‌லயும் உன்னுட‌ய‌ வ‌ச‌ணம்க‌லை கொண்டும் உன்னுட‌ய‌ இறுதி தூத‌ரின் [ஸல்] வ‌ழிகாட்டுத‌ல்க‌லை கொண்டும் எம‌து ச‌மூகத்தை வ‌ழி நடாத்துவ‌த‌ற்கு அருள் புறிவாயாக‌.

நண்றி……

நிந்தவூர் தெளஹீத்